Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 19 April 2025
webdunia

தந்தை இறந்த சோகத்தில் பெண் தற்கொலை - கணவருக்கு உருக்கமான கடிதம்

Advertiesment
Fatehr died
, சனி, 6 அக்டோபர் 2018 (12:28 IST)
தனது தந்தை இறந்த சோகத்தை தாங்க முடியாமல் திருமணமான பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புக்குளம் அருகே வசிப்பவர் ராஜ்குமார். இவரின் மனைவி கவிதா(30). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர்.  
 
கவிதாவின் தந்தை ராஜூ கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து தந்தையின் நினைவாக கவிதா சோகமாகவே இருந்துள்ளார்.
 
இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவருக்கு அவர் எழுத்தி வைத்திருந்த கடிதத்தில், என் தந்தையின் மரணம் என்னை மிகவும் வாட்டுகிறது. எனவே, எனக்கு வாழ விருப்பமில்லை. நான் ஒரு கோழைத்தனமான முடிவை எடுத்துள்ளேன். வேறு ஒரு பெண்ணை திருமனம் செய்து குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள். அம்மா என்னை மன்னித்து விடு. அப்பா இல்லாததை என்னால் தாங்க முடியவில்லை. என் மரணத்திற்கு யாரும் காரணம் அல்ல. அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு...