Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சபரிமலைக்கு எங்கள் வீட்டு பெண்களை அனுப்ப மாட்டோம்: ஐயப்ப பக்தர்கள் உறுதி

Advertiesment
சபரிமலைக்கு எங்கள் வீட்டு பெண்களை அனுப்ப மாட்டோம்: ஐயப்ப பக்தர்கள் உறுதி
, சனி, 6 அக்டோபர் 2018 (20:17 IST)
சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த பரபரப்பான தீர்ப்புகளில் ஒன்று அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபடலாம் என்பதுதான். இந்த தீர்ப்பு குறித்து இருவேறு கருத்துக்கள் பரவி வருகிறது. தீர்ப்புக்கு ஆதரவாக ஒரு கருத்தும், ஆன்மிக நம்பிக்கையில் நீதிமன்றம் தலையிட கூடாது என்ற இன்னொரு கருத்தும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் எங்கள் வீட்டு இளம் பெண்களை சபரிமலை கோவிலுக்கு அனுப்ப மாட்டோம் என்று கரூரை சேர்ந்த  ஐயப்ப பக்தர்கள் இன்று உறுதிமொழி ஏற்றனர். கரூரில் உள்ள பிரசித்திபெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு ஒன்றுக்கூடிய ஐயப்ப பக்தர்கள் கூட்டமைப்பினர், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மறுப்பு தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் மேல்முறையீடு சீராய்வு மனுவினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்

webdunia
சபரிமலைக்கு பெண்களை அனுப்ப மாட்டோம் என்றும் ஐயப்ப பக்தர்கள் உறுதிமொழி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ்-தினகரன் பரபரப்புக்கு இடையே டெல்லி செல்லும் ஈபிஎஸ்