ஏ ஆர் ரஹ்மானை ‘Outdated’ என சொன்னாரா கவின்?- பிரபலம் பகிர்ந்த தகவல்!

vinoth
சனி, 22 நவம்பர் 2025 (12:43 IST)
சிவகார்த்திகேயன் பாணியில் சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து ஆரம்பநிலை வெற்றியை பெற்றுள்ளார் கவின். அவர் நடிப்பில் வெளியான டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் கவனிக்கப்படும் ஒரு நடிகராகியுள்ளார்.

ஆனால் டாடா படத்துக்குப் பிறகு அவர் நடித்த படங்களான ‘ஸ்டார்’, ப்ளடி பெக்கர் மற்றும் கிஸ் ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்தன. நேற்று அவர் நடிப்பில் உருவான ‘மாஸ்க்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அதன் வெற்றி தோல்வி அடுத்த வாரத்தில்தான் தெரியும்.

இந்நிலையில் கவின் பற்றி பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஜெ பிஸ்மி தெரிவித்துள்ள கருத்து சினிமா வட்டாரத்தில் புகைச்சலைக் கிளப்பியுள்ளது. அவரது யுடியூப் சேனலில் “கவினை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர் ஒருவர் அவரை அணுகியுள்ளார். அந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மானை போடலாம் என சொல்லியுள்ளார். ஆனால் கவினோ ‘ஏ ஆர் ரஹ்மான் எல்லாம் அவுட்டேட் ஆகிவிட்டார்’ என சொல்லி ஜென் மார்ட்டின் என்ற இளம் இசையமைப்பாளரை பரிந்துரைத்தாராம்’ எனக் கூறியுள்ளார். இதையடுத்து இப்போது கவின் மேல் கடுமையான விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆண்ட்ரியாவின் வீடு பத்திரமாக இருக்கும் என நம்புகிறேன் – மாஸ்க் படத்தின் ரிசல்ட் குறித்து கவின்!

ப்ரோமோ ஷூட்டோடு படத்தை ஆரம்பிக்கும் ‘சூர்யா 47’ படக்குழு!

தலைவர் 173 படத்தின் இயக்குனர் இவரா?... திடீர் டிவிஸ்ட்!

கிட்டத்தட்ட அடுத்த சுந்தர் சிதான்.. ‘ரஜினி 173’ டேக் ஆஃப் ஆகுமா? யாருப்பா அந்த இயக்குனர்?

டிசம்பரில் தொடங்கும் தனுஷ்- ராஜ்குமார் பெரியசாமி திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments