ஜாய் கிரிஸில்டா தன்னை மிரட்டி திருமணம் செய்துக் கொண்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருந்த நிலையில், அது தொடர்பாக ஜாய் கிரிஸில்டா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், மெஹந்தி சர்கஸ் படம் மூலமாக நடிகராகவும் திரைத்துறையில் கால் பதித்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட நிலையில் மேக்கப் ஆர்டிஸ்ட்டான ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துக் கொண்டதாகவும், தற்போது கர்ப்பமாக இருப்பதற்கு காரணம் மாதம்பட்டி ரங்கராஜ்தான் என்றும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் ஜாய் கிரிஸில்டாவுக்கு பாதுகாப்பு தொகை வழங்க மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக் கொண்டதாக வெளியான தகவலை மறுத்து நேற்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் ஜாய் கிரிஸில்டா தன்னை மிரட்டி திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வைத்ததாகவும், அவர் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லையென்றும் மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் காதலுடன் பேசும் ஒரு வீடியோவை வெளியிட்டு “இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா??! Mr husband மாதம்பட்டி ரங்கராஜ்? மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க — இதுல லவ் லா பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா? கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்ற மாதிரி” என பதிவிட்டுள்ளார்.
Edit by Prasanth.K
இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா??! Mr husband @MadhampattyRR ?
— Joy Crizildaa (@joy_stylist) November 6, 2025
மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க — இதுல லவ் லா பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா?
கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்ற மாதிரி ????????
This message was sent to me by my so-called… pic.twitter.com/AH8yekYNBs