Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் துருவ நட்சத்திரம் ஷூட்டிங்… திடீரென நடந்த மாற்றம்!

மீண்டும் துருவ நட்சத்திரம் ஷூட்டிங்… திடீரென நடந்த மாற்றம்!
, வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (07:59 IST)
விக்ரம் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. அந்த படத்தின் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டி உள்ளது. பல ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த விக்ரம் மீண்டும் தேதிகள் தந்து நடித்துக் கொடுத்துள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து பணிகளை முடித்து மே மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது படத்தின் மீதமிருந்த காட்சிகள் அனைத்தையும் கௌதம் மேனன் படமாக்கி முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து படத்தை மே மாதம் 19 ஆம் தேதி ரிலீஸ் செய்ய வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று நடிகர் விக்ரம்மின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் படத்தை பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவனுக்கு கௌதம் மேனன் திரையிட்டுக் காட்டியுள்ளார். படத்தைப் பார்த்த அவர், சில மாற்றங்களை சொல்லியுள்ளாராம். அதனால் இன்னும் சில நாட்கள் ஷுட்டிங் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாம். இதையடுத்து விரைவில் விக்ரம் மீண்டும் துருவ நட்சத்திரம் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளார் என்று சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயிலர் படத்தின் ரிலீஸில் நடக்கும் மாற்றம்… லேட்டஸ்ட் தகவல்!