பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்களை அடுத்து மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக பைசன்நேற்று ரிலீஸானது. இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.
ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் பைசன்தான் தன்னுடைய முதல் படம் என்று துருவ் விக்ரம் தெரிவித்திருந்தார். படம் ரிலீஸாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது. வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. விக்ரம்முக்கு எப்படி சேது ஒரு அடையாளமாக அமைந்ததோ அது போல துருவ்வுக்கு பைசன் அடையாளமாக இருக்கும் என கருத்துகள் எழுந்துள்ளன.
இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டும் சுமார் 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் துருவ் விக்ரம் வாரிசு நடிகர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்துப் பேசியுள்ளார். அதில் “என்னைப் போன்ற வாரிசு நடிகர்கள் ரசிகர்களிடம் என் படத்தை ஏன் பார்க்க வேண்டும் எனக் காரணம் சொல்ல வேண்டியிருக்கிறது. அது நல்லதுதான்.” எனப் பேசியுள்ளார்.