நடிகர் துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது இதற்காக அவர் தூத்துக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்ட கபடி வீரர்களிடம் பயிற்சி பெற்று வருவதாகவும் இந்த பயிற்சியை 4 வாரங்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் இந்த படத்தின் பெயர் பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்துக்கு கபடிவீரன் என பெயர் வைக்க ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.