Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளர்!

நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளர்!
, வியாழன், 26 நவம்பர் 2020 (10:53 IST)
நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளர்!
பிரபல நடன இயக்குனர் பிருந்தா ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் அவர் இயக்கும் முதல் திரைப்படத்தில் கே பாக்யராஜ் மகன் சாந்தனு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டாட் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை இயக்கி நடன இயக்கமும் செய்து வருகிறார் பிருந்தா 
 
இந்தப் படம் ஒரு வித்தியாசமான காதல் கதை என்றும் இதுவரை சொல்லப்படாத காதல் கதை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இசை அமைப்பாளர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் இசையமைப்பாளராக தரண்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் 
 
webdunia
நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளர்!
மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதெல்லாம் பாலாஜிகிட்ட இல்ல கேட்கணும், ரியோவை கலாய்த்த ரம்யா!