Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எல்லாமே வதந்தி… சித்தி 2 சீரியல் முடிவு பற்றி பேசிய ராதிகா!

Advertiesment
எல்லாமே வதந்தி… சித்தி 2 சீரியல் முடிவு பற்றி பேசிய ராதிகா!
, வியாழன், 29 அக்டோபர் 2020 (09:19 IST)
நடிகை ராதிகா நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் நிறுத்தப் பட போவதாக செய்திகள் வெளியாகின.

800 பட விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கும் முரளிதரனுக்கும் ஆதரவாக பேசியவர்களில் நடிகை ராதிகாவும் ஒருவர். அவர் சன் தொலைக்காட்சிக்கு சொந்தமான சன்  ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பயிற்சியாளராக முரளிதரன் நீடித்து வருகிறார். அவரை அந்த பணியில் இருந்து நீக்க சொல்லி போராடுவார்களா என்பது போல பேசியிருந்தார்.

இது சன் தொலைக்காட்சி நிறுவனத்து அதிருப்தியை ஏற்படுத்த ராதிகா தயாரித்து நடித்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 தொலைக்காட்சி தொடரை முடித்துக் கொள்ளுமாறும் சொல்லியுள்ளனராம். இதனால் அந்த சீரியல் விரைவில் முற்றுப் பெறலாம் என சொல்லப்பட்டது. இது அந்த சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் ராதிகா. இந்த செய்தி குறித்து விளக்கமளிக்கும் படி ரசிகர் ஒருவர் கேட்க ‘வதந்திகள்’ என ஒரே வார்த்தையில் பதிலளித்துள்ளார் ராதிகா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதன் முறையாக தன் காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா