அன்பான ரசிகர்களே அதை மட்டும் செய்யாதீர்கள்… தனுஷ் 54 படக்குழு வேண்டுகோள்!

vinoth
வியாழன், 6 நவம்பர் 2025 (09:05 IST)
அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். இந்த படத்தின் வெற்றி காரணமாக கவனிக்கப்படும் இயக்குனராக மாறினார் விக்னேஷ் ராஜா. தற்போது தனது இரண்டாவது படமாக தனுஷை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டும் தொடங்குவதில் தாமதம் ஆனது. இந்நிலையில் ஜூலை  11 ஆம் தேதி பூஜையோடு படப்பிடிப்பு தொடங்கியது. சென்னையில் சிலக் காட்சிகள் அரங்கம் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு பின்னர் முக்கியமானக் காட்சிகள் ராமநாதபுரத்தில் படமாக்கப்பட்டன.

அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் இந்த படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் தனுஷ் மற்றும் நடிகர்கள் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன. அதை தனுஷ் ரசிகர்கள் பரப்பி வந்தனர். இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் “அன்பான தனுஷ் ரசிகர்களே தயவு செய்து படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளைப் பரப்பாதீர்கள். உங்கள் ஒத்துழைப்பு எங்களுக்கு  மிகவும் முக்கியம்” எனக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

கிளாமர் கேர்ள் யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படத் தொகுப்பு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஏழைக்கு கோபம் வந்தால் நேரடியாக அடிப்பான்; ஆனால், பணக்காரனுக்குக் கோபம் வந்தால்.. கவினின் ‘மாஸ்க்’ டிரைலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments