தனுஷ் அனிருத் கூட்டணி இணைந்த 3 படத்தில் இடம்பெற்ற 3 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் உலகளவில் புகழ்பெற்றது. இந்தியாவில் இருந்து பொரு பாடல் 100 கோடி பார்வைகளைப் பெற்றது அந்த பாடலுக்காகதான். அந்த பாடலைப்பாடி உலகப் புகழ் பெற்ற நடிகர் தனுஷ் செல்லும் இடங்களிலெல்லாம் அந்த பாடலைப் பாட சொல்லி நச்சரிக்கப்பட்டார்.
அந்த பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்போது துபாயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அது குறித்துப் பேசியுள்ளார். அதில் “நாங்கள் அந்த பாடலை விளையாட்டாக உருவாக்கினோம். கேட்டபோது வேடிக்கையாக இருந்தது. அப்போது நான் இசையமைப்பாளரிடம் வேடிக்கையானது கூட சில சமயம் வொர்க் அவுட் ஆகிவிடும் என்றேன்.
பின்னர் அந்த பாடலை ரெக்கார்ட் செய்தோம். அதை ஷூட் செய்தோம். படத்தில் இணைத்தோம். அந்த பாடலை விட்டு நான் நகர்ந்துவிட்டாலும், அந்த பாடல் இப்போது வரை என்னை விடவில்லை” எனக் கூறியுள்ளார்.