Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகம் பேசக்கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்க… குபேரா வெற்றி விழாவில் தனுஷ் தன்னடக்கம்!

vinoth
திங்கள், 23 ஜூன் 2025 (10:49 IST)
தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்த 'குபேரா' திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை பேன் இந்தியா படமாக ரிலீஸானது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்க சுனில் நாரங் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் இருந்தும் இதை ஒரு தெலுங்கு படமாகவே ரசிகர்கள் பார்த்ததால் தமிழ் நாட்டில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படத்துக்குக் கிடைக்கவில்லை.

இந்நிலையில் முதல் வார இறுதியில் இந்தியாவில் இந்த படம் 35 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழை விட தெலுங்கில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இதையடுத்து ஐதராபாத்தில் இந்த படத்தின் வெற்றி விழா நடந்தது. அதில் கலந்துகொண்டு தனுஷ் பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

அதில் “இரத்தம், கத்தி, ஆக்‌ஷன் இருக்கும் படங்கள்தான் பெரிய வெற்றி பெறும் என்ற மாயை உள்ளது. ஆனால் மனித உணர்வுகளைப் பேசும் படங்களும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை குபேரா கொடுத்துள்ளது. தமிழிலும் இதுபோல ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் வெற்றி பெற்றது. வெற்றி பெறும் போது அதிகம் பேசக் கூடாது என்று என் அம்மா சொல்லியுள்ளார். நான் இனிமேல் குறைவாகதான் பேசப் போகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் தேவரகொண்டா மேல் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

தேர்தல் முடிவை பொறுத்து தான் அடுத்த படம்.. உண்மையை சொன்ன விஜய்..!

13 கோடியா? 30 கோடியா? குத்துமதிப்பாக அடிச்சுவிட்ட ‘குபேரா’ படக்குழு..

அதிகாரத்திற்காக அல்ல.. மக்களுக்காக மட்டுமே தலைவர்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments