Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷின் 51 ஆவது படம் அறிவிப்பு

சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷின் 51 ஆவது படம் அறிவிப்பு
, வெள்ளி, 28 ஜூலை 2023 (09:35 IST)
நடிகர் தனுஷ் நடித்த  முதல் நேரடி தெலுங்குப் படமான ’வாத்தி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. தற்போது அருண் மாதேஸ்வரன் நடிப்பில் உருவாகிவரும் ’கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து  முடித்துள்ளார்.

இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பூஜை கடந்த ஆண்டு நடைபெற்றாலும் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பதாக இருந்தது.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்டு தனுஷ் தன்னுடைய 50 ஆவது படத்தில் கவனம் செலுத்தி வரும் நிலையில் சேகர் கமுலா இயக்கும் தனுஷ் படம் அவரின் 51 ஆவது படமாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இமயமலை பயணம் செய்யும் ரஜினிகாந்த்.. எப்போது புறப்படுகிறார்?