இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இமயமலை ஆன்மீக பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கி உள்ள ஜெயிலர் என்ற படத்திலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.
இதனை அடுத்து அவர் ஜெய்பீம் ஞானவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு செல்வதை கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக கொண்டிருந்த ரஜினிகாந்த் உடல் நல குறைவு காரணமாகவும், கொரோனா காரணமாகவும் இரண்டு ஆண்டுகளாக இமயமலை செல்லவில்லை.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் இமயமலை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 6ஆம் தேதி அவர் இமயமலை செல்ல இருப்பதாகவும் ஒரு வாரம் அவர் தங்குவதாகவும் பத்ரிநாத் கேதார்நாத் உள்ளிட்ட தலங்களுக்கும் அவர் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.