Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷின்' திருச்சிற்றம்பலம்' பட 4 வது சிங்கில் ரிலீஸ்...தனுஷின் ஃபேவரட் பாடல் !

thiruchitrambalam
, சனி, 30 ஜூலை 2022 (22:00 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தின் 4 வது சிங்கில் இன்று வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடித்துள்ளனர்.

தற்போது, இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் இத்திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து படத்தின் இசை வெளியீடு இன்று நடந்து வருகிறது. இந்த விழாவில் அனிருத் மற்றும் தனுஷ் இணைந்து இசை கச்சேரி நடக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்றுள்ள ‘’தேன்மொழி ‘’என்ற  4 வது சிங்கில் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னணி நடிகரின் படப்பிடிப்பு தளத்தில் திடீர் தீ விபத்து... ஒருவர் பலி