தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வி கிரியேஷன்ஸ் தாணு தயாரித்த கர்ணன் திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் கர்ணன். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு நடுவே கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி விமர்சனம் மற்றும் நல்ல வசூலை பெற்றது. கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக கர்ணன் அமைந்தது.
இந்நிலையில் நேற்றோடு இந்த படம் வெளியாகி ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து நானே வருவேன் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த தனுஷை இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் சந்தித்து கெக் வெட்டி கர்ணன் படத்தின் முதல் ஆண்டு நிறைவை கொண்டாடியுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.