Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீஸான இரண்டாவது நாளே இணையத்தில் கசிந்த தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்!

vinoth
சனி, 21 ஜூன் 2025 (14:11 IST)
தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்த 'குபேரா' திரைப்படம் நேற்று பேன் இந்தியா படமாக ரிலீஸானது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்க சுனில் நாரங் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் இருந்தும் இதை ஒரு தெலுங்கு படமாகவே ரசிகர்கள் பார்த்ததால் தமிழ் நாட்டில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படத்துக்குக் கிடைக்கவில்லை.

ஆனால் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா என பேன் இந்தியா நடிகர்கள் இருப்பதால் இந்தியா முழுவதும் இந்த படத்துக்கு ஒரு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. இதனால் கலவையான விமர்சனங்கள் மற்றும் படத்தின் நீளம் ஆகியவற்றைத் தாண்டியும் முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. இந்திய அளவில் இந்த படம் முதல் நாளில் 13 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக ஆன்லைன் ட்ராக்கிங் தளமான sacnilk வெளியிட்டுள்ளது. இது தனுஷின் சமீபத்தையப் படங்களில் அதிகபட்ச ஓபனிங் என்று சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று ரிலீஸான இந்த படம் இரண்டாவது நாளே இணையத்தில் திருட்டுத்தனமாக கசியவிடப்பட்டுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சமீபகாலமாக புதிய படங்கள் ரிலீஸான உடனேயே இணையத்தில் பைரஸியாக வெளிவருவது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ பட ரிலீஸ் தேதியில் சிக்கல்!

மீண்டும் ஒரு ரிலீஸ் தேதியை அறிவித்த பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீர மல்லு’ படக்குழு!

பாசிட்டிவ் விமர்சனங்கள் இருந்தும் DNA முதல் நாள் வசூலில் மந்தம்..!

அறிவு குறைபாடு அவங்களுக்கு இல்ல..! நிதர்சனத்தை காமெடியாக சொன்ன Sitaare Zameen Par! - திரை விமர்சனம்!

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments