Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருச்சிற்றம்பலம் ஹிட்டால் முந்தைய படத்தைக் கண்டுகொள்ளாத இயக்குனர் மித்ரன்?

திருச்சிற்றம்பலம் ஹிட்டால் முந்தைய படத்தைக் கண்டுகொள்ளாத இயக்குனர் மித்ரன்?
, செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (15:11 IST)
நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி மற்றும் உத்தமபுத்திரன் ஆகிய 3 படங்களில நடித்து சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ரிலீஸான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

இதையடுத்து இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் உருவான அரியவன் என்ற படத்தின் போஸ்டர் சமீபத்தில் ரிலீஸானது. இந்த படத்தில் அறிமுக நடிகர்கள் ஈஷான் மற்றும் ப்ரனாலி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை அவர் திருச்சிற்றம்பலம் படத்துக்கு முன்பே இயக்கி முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது திருச்சிற்றம்பலம் ஹிட்டுக்குப் பிறகு இந்த படத்தை அவர் கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் அரியவன் போஸ்டரை தயாரிப்புத் தரப்பு வெளியிட்ட அதே நாளில் மாதவன் நடிப்பில் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாடா படத்துக்குக் கிடைத்த வரவேற்பு… கவினுக்கு வாய்ப்புக் கொடுக்கும் கமல்ஹாசன்!