Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டு பேரை மாத்துறதுக்கு பதிலா இந்தியா பேரை மாத்துங்க! – இயக்குனர் ரத்னகுமார் ஆவேசம்!

Advertiesment
Ratnakumar
, திங்கள், 13 பிப்ரவரி 2023 (15:45 IST)
தமிழ் சினிமா இயக்குனர் ரத்னகுமார் தனது படத்தின் காட்சி தன்னிச்சையாக தணிக்கை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழில் மேயாத மான், ஆடை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரத்னகுமார். இவரது இயக்கத்தில் சந்தானம் நடித்த “குலுகுலு” படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் “இந்திய பிரதமர்” என ஒரு இடத்தில் குறிப்பிடும் காட்சியை எந்த விளக்கமும் இல்லாமல் தணிக்கை வாரியம் நீக்கியுள்ளது.

தமிழில் ஒரு மாதிரியாகவும், தெலுங்கில் ஒரு மாதிரியாகவும் சென்சார் போர்டு செயல்பட்டது குறித்து பதிவிட்டுள்ள ரத்னகுமார் “திரைப்பட சென்சாரில் தன்னிச்சையாக காட்சிகளை நீக்குவது நியாயமற்ற விஷயம். குலுகுலு படத்திற்கு இது நடந்ததால் மட்டும் சொல்லவில்லை. ஜனநாயகத்தில் கலை மிக முக்கியமான தூண். அதன்மீது கடுமையாக நடந்து கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டை தமிழகம் என மாற்ற முயல்வதற்கு பதில் இந்தியாவை யுனிடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா என மாற்றம் செய்து விடுங்கள். நன்றி!” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகுபலி பட நடிகர் மீது நில அபகரிப்பு வழக்கு