தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது
இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்து தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் மிகப்பெரிய லாபம் கொடுத்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படம் வசூல் அளவில் மட்டுமின்றி அரசியல் ரீதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தை பார்த்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்த கருத்தால் அரசியல் உலகில் பெரும் பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய தற்போது முயற்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழில் இந்த படத்தை தயாரித்த கலைபுலி எஸ் தாணு அவர்கள் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபு அவர்களுடன் இணைந்து இந்த படத்தை தெலுங்கில் தயாரிக்கின்றார்
இந்த படத்தில் தனுஷ் இந்த கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், டைட்டில் மற்றும் படக்குழுவினர் குறித்த தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது