காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும், பாராட்டியதற்கும் நன்றி என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தனுஷ் டிவிட் போட்டுள்ளார்.
தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆம், தனுஷின் கடந்த சில படங்கள் சுமாரான வசூலையே கொடுத்த நிலையில் அசுரன் படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு தூத்துக்குடியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அசுரன் திரைப்படத்தை பார்த்தார். இந்த படத்தை பார்த்த பின்னர் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவை ஒன்றை போட்டுள்ளார். அவர் பதிவிட்டதாவது,
அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷூக்கும் எனது பாராட்டுகள் என்று பதிவிட்டுள்ளார்.
இதை கண்ட தனுஷ், ஸ்டாலினுக்கு தனது நன்றி தெரிவித்து டிவிட் ஒன்றை போட்டுள்ளார். அதில் தனுஷ் குறிப்பிட்டுள்ளதாவது, காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும், பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா. பெருமகிழ்ச்சி அடைகிறோம்! என பதிவிட்டுள்ளார்.