தனுஷின் 52வது படம்.. அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!

Mahendran
செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (11:56 IST)
தனுஷ் நடித்த 50வது திரைப்படமான "ராயன்" சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம்  நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் "குபேரன்" என்ற படத்தில் நடித்து வருகிறார், இது அவருடைய 51வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், தனுஷ் நடிக்க இருக்கும் 52வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியிடப்பட்டது. "டான் பிக்சர்ஸ்" நிறுவனம் இந்த அறிவிப்பில், "தனுஷின் 52வது திரைப்படத்தை தயாரிப்பதில் பெருமை கொள்கிறோம், நடிப்பு அரசன் தனுஷ் எங்கள் நிறுவனத்தில் நடிப்பது எங்களுக்கு பெருமை" என்று தெரிவித்துள்ளது.
 
மேலும் "எங்கள் நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் நடிக்க சம்மதித்த தனுஷ் அவர்களுக்கு நன்றி. ஒரு புதிய பயணத்தை நாங்கள் தொடங்குகிறோம்" என்று டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் கூறியுள்ளார்.
 
இந்த படத்தில் தனுஷுடன் அருண் விஜய், நித்யா மேனன், அசோக் குமார், ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும், ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், இந்த படத்தை தனுஷ் இயக்க உள்ளார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேந்திரன ஏன் தல மேல தூக்கி வச்சுக் கொண்டாடுறாங்க… அடுத்த சர்ச்சையைக் கிளப்பிய ராஜகுமாரன்!

எல் ஐ கே ரிலீஸில் இருந்த குழப்பம்… புத்திசாலித் தனமாக தப்பித்த தயாரிப்பாளர் லலித் குமார்!

கருப்பு படத் தயாரிப்பாளருக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பிய ’சூர்யா 46’ தயாரிப்பு நிறுவனம்!

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments