Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வன்கொடுமை வழக்கு! நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் தலைமறைவா?

Siva
செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (10:10 IST)
பிரபல திரைப்பட நடன இயக்குநர் ஜானி மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவான நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நட்சத்திரங்களுக்காக நடனம் அமைத்தவர் ஜானி மாஸ்டர்.  இவர் மீது 21 வயதான உதவி நடன இயக்குநர் பாலியல் புகார் செய்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை (விவகாரம் 376), கொலை மிரட்டல் (விவகாரம் 506), மற்றும் உடல் துன்புறுத்தல் (விவகாரம் 323) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகாரில், "நான் ஜானி மாஸ்டரின் உதவி இயக்குநராக 6 மாதங்கள் பணியாற்றினேன். படப்பிடிப்புகளின் போது பல இடங்களில் அவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன். 2017-ம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள எனது வீட்டிற்கு வந்த அவர், தொடர்ந்து மிரட்டி, மீண்டும் பாலியல் இச்சைகளுக்காக துன்புறுத்தினார்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜன சேனா கட்சியில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் தலைமறைவாகி இருப்பதாகவும், அவரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்