தேவரா 2 அவ்வளவுதான்… அடுத்த படத்துக்கு தயாரானா இயக்குனர் கொரட்டால சிவா!

vinoth
ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025 (10:31 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில்  ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரின்  நடிப்பில் ‘தேவரா முதல் பாகம்’கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பின் என் டி ஆர் நடித்த படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது.

ஆனால் படம் வெளியான முதல் காட்சியிலேயே நெகட்டிவ் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது.  படத்தின் பல காட்சிகள் இணையத்தில் ட்ரோல் ஆகின. ஆனாலும் படம் திரையரங்குகள் மூலமாக மொத்தம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிட்டால் இது லாபம் தரும் வசூல் இல்லை என்று சொல்லப்பட்டது. இதனால் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பில்லை என்று கருத்துகள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது இயக்குனர் கொரட்டாலா சிவா தேவரா 2 கதையை கிடப்பில் போட்டுவிட்டு அடுத்தக் கதையை இயக்கத் தயாராகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அவரின் அடுத்த படத்தில் நாகை சைதன்யா அல்லது இன்னொரு இளம் ஹீரோ நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரான்ஸின் உயரிய 'செவாலியர்' விருது: தமிழ் திரையுலக பிரபலத்திற்கு அறிவிப்பு!

செம கடுப்புல எழுதுன ரவிமோகனின் அந்த பாடல்.. பாட்டு எந்தளவு ஹிட் தெரியுமா?

முதல்முறையாக நாமினேஷன் பட்டியலில் கனி.. இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 10 பேர் யார் யார்?

அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதும் ‘ஆட்டோகிராஃப்’ வேண்டாம்னு சொல்லிட்டார்.. விக்ரம் குறித்து சேரன்!

தலைப்பே எங்களுக்கு எதிராக அமைந்துவிட்டது – கிஸ் பட இயக்குனர் சதீஷ் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments