இந்த ஆண்டு தீபாவளி, அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்களில் பயணிக்க விரும்பும் பயணிகள் ஆகஸ்ட் 17 முதல் ரயில் டிக்கெட்டுகளை இன்று முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.
அக்டோபர் 16ஆம் தேதி பயணிக்க விரும்புபவர்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் ஆன்லைன் மற்றும் ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் தொடங்கியது.
குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் முக்கிய ரயில்களான பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் நிரம்பி, காத்திருப்போர் பட்டியல் அதிகமானது.
தீபாவளிப் பண்டிகைக்கு முந்தைய நாளான அக்டோபர் 19-க்கான முன்பதிவு ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கவுள்ளது. தீபாவளி நாளான அக்டோபர் 20-க்கான முன்பதிவு ஆகஸ்ட் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது.
அக்டோபர் 13 முதல் 26 வரை சொந்த ஊர் சென்றுவிட்டு, நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 வரை திரும்ப முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டணத்தில் 20% தள்ளுபடி அளிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.