சிவகார்த்திகேயன் படத்தில் முக்கிய வேடத்தில் இணைந்த அப்பாஸ்?

vinoth
ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025 (06:57 IST)
இயக்குனர் கதிர் இயக்கிய, காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அப்பாஸ். அந்த படம் அடைந்த மிகப்பெரிய வெற்றியால் உடனடியாக சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் மாறினார். அதையடுத்து அவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவையெதுவும் அவரின் முதல் படம் வெற்றிப்படமாக அமையவில்லை.

இiதனால் ஒரு கட்டத்தில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார். அதுவும் பெரியளவில் கைகொடுக்காத நிலையில் அதிருப்தியான அப்பாஸ் சில விளம்பர படங்களில் தலைகாட்டி விட்டு காணாமல் போனார். கடந்த 10 ஆண்டுகளாக நியுசிலாந்தில் செட்டில் ஆகி வாழ்ந்து வந்த அப்பாஸ், தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்க உள்ளதார்.

களவாணி மற்றும் வாகை சூடவா ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்ற சற்குணம் தற்போது துஷாராவை வைத்து ஒரு வெப் சீரிஸை இயக்கி வருகிறார். இந்த இணையத் தொடரில் அப்பாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதையடுத்து மரிய ராஜா இளஞ்செழியன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் ஜி வி பிரகாஷுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் அவர் சம்மந்தமானக் காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments