தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரான அல்லு அர்ஜுன் புஷ்பா படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் அறியப்பட்ட நடிகராகியுள்ளார். அவரின் புஷ்பா 2 திரைப்படம் இந்திய அளவில் 2000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இந்தியாவின் அதிகம் வசூல் செய்யப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
இதையடுத்து தற்போது அட்லி இயக்கும் படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படம் சுமார் 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது. அதனால் இந்த படத்தை இந்தியாவைத் தாண்டியும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். அதனால் ஹாலிவுட்டின் முன்னணி ஸ்டுடியோவான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் தீபிகா படுகோன், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருனாள் தாக்கூர் என பல ஹீரோயின்கள் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து அல்லு அர்ஜுன் த்ரிவிக்ரம் மற்றும் பிரசாந்த் நீல் ஆகியோர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் ராஜமௌலி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது இது சம்மந்தமாக ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.