Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேட்ட 100 கோடி, விஸ்வாசம் 125 கோடி – சாத்தியமே இல்லை...

பேட்ட 100 கோடி, விஸ்வாசம் 125 கோடி – சாத்தியமே இல்லை...
, சனி, 19 ஜனவரி 2019 (15:54 IST)
பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மிகைப்படுத்தப்பட்ட வசூல் விவரங்களை வெளியிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி  பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் ரிலிஸாகின. இரண்டுப் படங்களுமே மிகப்பெரிய நட்சத்திரங்களைக் கொண்டவையாக இருந்ததனால் தமிழகம் முழுக்க உள்ள தியேட்டர்களை கிட்டத்தட்ட சமமாகப் பிரித்து ரிலிஸ் ஆகின.

இரண்டுப் படங்களுமே தத்தமது ரசிகர்களை திருப்திப் படுத்தின. இதனால் மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்று ரிலிஸான முதல் இரண்டு நாட்களில் நல்ல வசூல் சாதனை நிகழ்த்தின. அதிலிருந்து பொங்கல் பண்டிகையான 3 நாட்கள் வரை இருப்படங்களுமே 60 முதல் 70 சதவீத நிரம்பிய இருக்கைகளோடு  ஓடின. மீண்டும் பொங்கல் பண்டிகையில் இருந்து ஹவுஸ்புல்லாக ஓட ஆரம்பித்தன. பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் அதிகளவில் குடும்ப ரசிகர்களைக் கவர்ந்திழுத்ததால் தமிழகத்தில் விஸ்வாசம் பேட்டையை விட அதிக வரவேறபைப் பெற்றது. தமிழ்நாடு தவிர்த்த உலக அளவில் பேட்ட படம் அதிகளவில் வரவேற்பைப் பெற்று வசூல் செய்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் யார் வசூல் செய்தார்கள் என்பதிலேயே ரசிகர்களும் இரு தயாரிப்பு நிறுவனங்களும் போட்டிப் போட ஆரம்பித்தனர். சன்பிக்சர்ஸ் இம்முறை ஆன்லைன் டிராக்கர்ஸின் புள்ளி விவரங்களை மறுத்து களத்தில் இருக்கும் விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியனை வைத்து தங்கள் படமான பேட்ட யின் வசூலை உயர்த்திக் கூறி விளம்பரம் தேடிக் கொண்டது. பேட்ட படம் 11 நாள்களில் 100 கோடு வசூல் செய்து குறைந்த நாட்களில் 100 கோடி வசூலித்த படம் என்ற சாதனையை நிகழ்த்தும் என அறிவிதார்.
webdunia

இதற்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக விஸ்வாசம் படத்தின் விநியோக நிறுவனமாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் விஸ்வாசம் படம் தமிழகத்தில் 8 நாட்களிலேயே 125 கோடி வசூலித்ததாக ஒருப் பதிவைப் பகிர்ந்தது. இதனால் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் இந்த புள்ளி விவரங்களை எடுத்துக் காட்டி மீண்டும் சமூக வலைதளங்களில் மோத ஆரம்பித்தனர்.

இப்படி இரு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு வசூலை மிகைப்படுத்திக் கூற உண்மை நிலவரமோ வேறுவிதமாக உள்ளது. இரண்டு படங்களுமே நல்ல வசூல் செய்தாலும் இவர்கள் சொல்லும் அளவுக்கு வசூல் செய்ய வில்லை என்றும் தெரிவிக்கின்றன. மேலும் இதுவரை தமிழகம் முழுவதும் சோலோவாக ரிலிஸாகி அதிகளவு வசூல் செய்ததாக சொல்லப்படும் சர்கார் படத்தின் வசூல்தான் இதுவரை பெஞ்ச் மார்க்காக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்த இரண்டுப் படங்களும் சொல்லும் அளவோ சர்காரின் வசூலை விட இருமடங்காக இருக்கிறது. இது சாத்தியமே இல்லாத தொகை எனவும் கூறப்படுகிறது.
webdunia

மேலும் இருப்படங்களுமே அந்த படக்குழு சொல்லும் தொகையில் பாதியை விடக் கொஞ்சமே அதிகமாக வசூலித்து இருக்கலாம் எனத் தெரிகிறது. பேட்ட படம் இதுவரை கிட்டதட்ட 60 கோடி ரூபாயும் விஸ்வாசம் படம் 70 முதல் 75 கோடி ரூபாய் வரை வசூல் செய்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் ஜெயம் ரவியின் குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகர்..!