Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டேவிட் வார்னரின் ‘Mind Block’ ஸ்டெப் வைரல் ஹிட் - வீடியோ!

டேவிட் வார்னரின்  ‘Mind Block’ ஸ்டெப் வைரல் ஹிட் - வீடியோ!
, சனி, 30 மே 2020 (14:58 IST)
டிக்டாக்கில் எப்போதும் சினிமா பாடல்களை மரு உருவாக்கம் செய்வதில் பயணர்கள் ஆர்வம் காட்டுவர். அந்தவகையில் ஹிட் அடித்த பாடல்கள் டிக்டாக்கில் ஒரு ரவுண்டு வந்துவிடும். இந்நிலையில் இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் பிரபலங்கள் பலரும் தங்களுக்கு பிடித்த பாடல் பாடுவது , குடும்பத்துடன் நடனமாடுவது, டிக்டாக் செய்வது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை நல்ல ஜாலி மூடில் வைத்துள்ளனர்.

அந்தவகையில் ஆரம்பத்திலிருந்தே பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மகள் மற்றும் மனைவியுடன் நடனமாடும் கியூட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அல்லு அர்ஜுனின் புட்ட பொம்மா , தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட பாடல்களுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் சூப்பர் வைரலானது. மேலும் பாகுபலி பிரபாஸ் கெட்டப்பில் உடையணிந்து அந்த படத்தின் மாஸ் வசனமான " அமரேந்திர பாகுபலியாகிய நான்.... என சொன்னதும் அவரது மகள் ஓடி வந்து ஆரவாரம் செய்த வீடியோ செம வைரலானது.

இதையடுத்து வார்னரிடம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மகேஷ் பாபுவின் ‘Mind Block’ பாடலுக்கு டிக்டாக் செய்ய சொல்லி கோரிக்கை வைத்தனர். அதற்கு வார்னர்  ஒரு வீடியோ வெளியிட்டு இதற்கு 250K லைக் வந்தால்  தனது அடுத்த வீடீயோவை வெளியிடுவதாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது  ‘Mind Block’ பாடலுக்கு மனைவியுடன் டிக்டாக் செய்துள்ள வீடியோ இணையத்தை அடித்து துவம்சம் செய்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடங்கமறுக்கும் அமேரா தஸ்தர்... அல்லல்படும் ரசிகர்கள்!