Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமரேந்திர பாகுபலியாகிய நான்... மகளுடன் இணையத்தை கலக்கும் டேவிட் வார்னர் - வீடியோ!

Advertiesment
அமரேந்திர பாகுபலியாகிய நான்... மகளுடன் இணையத்தை கலக்கும் டேவிட் வார்னர் - வீடியோ!
, சனி, 16 மே 2020 (18:44 IST)
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பாகுபலி படத்தின் மாஸ் வசனத்தை மகளுடன் டிக்டாக் செய்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிக்டாக்கில் எப்போதும் சினிமா பாடல்களை மரு உருவாக்கம் செய்வதில் பயணர்கள் ஆர்வம் காட்டுவர். அந்தவகையில் ஹிட் அடித்த பாடல்கள் டிக்டாக்கில் ஒரு ரவுண்டு வந்துவிடும். இந்நிலையில் இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் பிரபலங்கள் பலரும் தங்களுக்கு பிடித்த பாடல் பாடுவது , குடும்பத்துடன் நடனமாடுவது, டிக்டாக் செய்வது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை நல்ல ஜாலி மூடில் வைத்துள்ளனர்.

அந்தவகையில் ஆரம்பத்திலிருந்தே பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மகள் மற்றும் மனைவியுடன் நடனமாடும் கியூட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அல்லு அர்ஜுனின் புட்ட பொம்மா , தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட பாடல்களுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் சூப்பர் வைரலானது. இந்நிலையில் தற்போது பாகுபலி பிரபாஸ் கெட்டப்பில் உடையணிந்து அந்த படத்தின் மாஸ் வசனமான " அமரேந்திர பாகுபலியாகிய நான்.... என சொன்னதும் அவரது மகள் ஓடி வந்து ஆரவாரம் செய்கிறார். இந்த வீடியோ டோலிவுட் , கோலிவுட் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Guess the movie!! @sunrisershyd

A post shared by David Warner (@davidwarner31) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹீரோக்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வர தயக்கம் ?