ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் குடும்பத்தின் அடுத்த டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரல்..!
டிக்டாக்கில் எப்போதும் சினிமா பாடல்களை மரு உருவாக்கம் செய்வதில் பயணர்கள் ஆர்வம் காட்டுவர். அந்தவகையில் ஹிட் அடித்த பாடல்கள் டிக்டாக்கில் ஒரு ரவுண்டு வந்துவிடும். இந்நிலையில் இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் பிரபலங்கள் பலரும் தங்களுக்கு பிடித்த பாடல் பாடுவது , குடும்பத்துடன் நடனமாடுவது, டிக்டாக் செய்வது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை நல்ல ஜாலி மூடில் வைத்துள்ளனர்.
அந்தவகையில் ஆரம்பத்திலிருந்தே பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மகள் மற்றும் மனைவியுடன் நடனமாடும் கியூட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அல்லு அர்ஜுனின் புட்ட பொம்மா , தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட பாடல்களுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் சூப்பர் வைரலானது. மேலும் சமீபத்தில் பாகுபலி கெட்டப்பில் உடையணிந்து மாஸ் வசனத்தை பேசி அசத்தினார். இந்நிலையில் தற்போது மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து புகழ்பெற்ற "முக்காலா முக்காபுலா லேலா" பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ மில்லியன் பார்வையார்களை கடந்துவிட்டது. கூடிய விரைவில் கோலிவுட் சினிமா இவரை படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகிறது.