"இதுவரை பார்த்திராத ஃபிட்டான ரஜினி" - ஹிட்டான செகண்ட் லுக்!

புதன், 11 செப்டம்பர் 2019 (18:08 IST)
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.


 
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டது. 
 
பின்னர் அதை தொடர்ந்து சமீபநாட்களாக அடிக்கடி போட்டோக்களும், வீடியோக்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துவிட்டது. ஆனால் படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியவில்லை என்ற ஏக்கத்தில் இருந்து வந்த ரசிகர்களுக்கு தற்போது செம்ம ட்ரீட் கொடுத்துள்ளனர். 
 
ஆம், சற்றுமுன் தர்பார் படத்தின் இரண்டாம் லுக் போஸ்ட்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரோடுக்ஷன் வெளியிட்டுள்ளனர். அதில் ரஜினி மிகவும் கட்டான தோற்றத்தில் இளமையாக இருக்கிறார். இந்த போஸ்டரை பார்க்கும்போது ஏதோ சண்டை காட்சி போல் தெரிகிறது. மேலும் பாக்சிங் ரிங்கை கையில் தூக்கிக்கொண்டு வெறித்தனமான பார்வையில் தோற்றமளிக்கிறார் ரஜினி. 

Younger, smarter, wiser, tougher... Thalaivar in a never seen before Avatar #DarbarSecondLook... https://t.co/Ssj5YJrDgh

— A.R.Murugadoss (@ARMurugadoss) September 11, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அப்பா மட்டுமில்லை லொஸ்லியாவை திட்டிய தங்கை - வீடியோ!