கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவியை அடுத்து தற்போது பிரபல நடன இயக்குனர் கல்யாண் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார்.
சின்மயி தனது டுவிட்டரில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலகள் பற்றி தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து மற்றும் நடிகர் ராதாரவி மீதும் புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது தற்போது இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அதை சின்மயி தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அந்த டுவிட்டில் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாவது ‘நான் இலங்கையைச் சேர்ந்தவள். நடனத்தின் மீது விருப்பம் கொண்டவள். அதற்காக சால்சா நடனமும் கற்றிருக்கிறேன். சினிமாவில் பணிபுரிய நான் 2010-ல் சென்னைக்கு வந்தேன். எனது நடன குரு மூலம் நடன இயக்குனர் கல்யாணை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் என்னை சில நடன அசைவுகளை ஆடிக் காட்ட சொன்னார். நானும் மகிழ்ச்சியாக ஆடிக் காட்டினேன். ஆனால் அவர் நடனத்தின் போது தவறான எண்ணத்தில் என்னைத் தொட்டார். உடனே அங்கிருந்து நான் வெளியேறிவிட்டார். பின்பு அவர் எனது மொபைல் எண்ணிற்கு அழைத்து என்னை படுக்கைக்கு அழைத்தார். அதைக் கேடு அதிர்ந்த நான் உடனே நான் அழைப்பைத் துண்டித்து விட்டேன். அதன் பிறகு இலங்கைக்கே திரும்பி விட்டேன். இப்போது கல்யாணமாகி எனது ஆசைகளைப் புதைத்து விட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறேன்.’ என தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.