Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வைரமுத்து - சின்மயி பாலியல் புகார்: ஆண்டாள் விவகாரமா? அன்றைய திமுகவின் ஆதிக்கமா?

Advertiesment
வைரமுத்து - சின்மயி பாலியல் புகார்: ஆண்டாள் விவகாரமா? அன்றைய திமுகவின் ஆதிக்கமா?
, வியாழன், 11 அக்டோபர் 2018 (08:03 IST)
பிரபல பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து 13 ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைத்தலத்தில் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 
 
இதனை தொடர்ந்து பெண் பத்திரிக்கையாளர் ஒருவரும் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டார். இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இதன் பிறகு வைரமுத்து, உண்மையற்ற விஷ்யங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. காலம் இதற்கு பதில் சொல்லும் என குறிப்பிட்டார். 
 
இருப்பினும் இதை விடாத சின்மயி வைரமுத்துவை பொய்யர் என விமர்சித்தார். அதன் பின்னர் சின்மயி-யின் தாயார் சுவிட்சர்லாந்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் போது வைரமுத்து எனது மகளுக்கு பாலியல் அழுத்தம் கொடுத்தார் என கூறினார். ஆனால், இதனை அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மறுத்துள்ளார். 
 
இந்த பிரச்சனை இவ்வாறு இருக்க சின்மயி-யின் செயல்கள் சுச்சிலீக்ஸை நினைவுபடுத்துகிறது. இந்த பிரச்சனையில் யார் உண்மையை பேசுகின்றனர் என்பது மறைக்கப்பட்ட பதிலாக உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தை வேறு இரு கோணத்திலும் பார்க்க தோன்றுகிறது. 
 
ஆம், ஒரு வேலை அன்றைய காலத்தில் திமுக என்ற பலம் பொருந்திய ஆதரவில் வைரமுத்து இவ்வாறு செய்திருக்க கூடுமோ?அல்லது ஆண்டாள் விவகாரத்தில் இந்துத்துவா தலைகளின் கோபம் இப்படி சின்மயியை ஏவி தீர்க்கப்படுகிறதோ? 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சின்மயி-வைரமுத்து விவகாரம்: நடிகர்களின் மெளனம் ஏன்? தமிழிசை கேள்வி