Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘மண்ணில் இருந்து மறைந்தாலும்…’ வடிவேலு பாலாஜி புகைப்படத்தை பதிவிட்டு புகழ் சோகம்

Advertiesment
‘மண்ணில் இருந்து மறைந்தாலும்…’ வடிவேலு பாலாஜி புகைப்படத்தை பதிவிட்டு புகழ் சோகம்
, வியாழன், 19 மே 2022 (11:01 IST)
மறைந்த நடிகர் வடிவேலு பாலாஜியின் மறைவு சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். மிக இளம் வயதில் அவர் மறைந்தது அவரது ரசிகர்களுக்கும் சக நகைச்சுவைக் கலைஞர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. பலரும் அவரின் மறைவைக் கேட்டு தாங்கமுடியாமல் அழுதனர்.

இந்நிலையில் வடிவேலு பாலாஜியோடு பல நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றியவரும் தற்போது சினிமாவில் கதாநாயகன் ஆகிவிட்ட புகழ் இன்று வடிவேல் பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் “மண்ணில் இருந்து மறைந்தாலும் என் மனதில் இருந்து நீங்கள் மறையவில்லை மாமா. வாய்ப்பு தேடி வரும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தீர்கள். உங்களுடன் இருந்த ஒவ்வொரு நாளும் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள். பலவற்றை எனக்கு கற்று கொடுத்தீர்கள். மற்றவர்களை எப்போதும் சிரிக்க வைப்பதே கடமை என வாழ்ந்த நீங்கள், இப்போது எங்களுடன் இல்லாமல் அழ வைத்து விட்டீர்கள். நினைவில் இருந்து என்றும் நீங்காது உங்கள் முகம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சின்ன படங்களுக்கு இனி தியேட்டரில் இடம் இல்லையா? – தயாரிப்பாளர் SR பிரபுவின் டிவீட்!