லைகா தயாரிக்கும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் வடிவேலு கதாநாயகனாக மறுபடியும் ரி எண்ட்ரி கொடுக்கிறார்.
வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் பாடல்களுக்கு நடனம் அமைக்க பிரபுதேவா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. அதை உறுதிப்படுத்தி இப்போது லைகா புதிய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளது. அதில் “நாய்சேகர் படத்தில் பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. வைகைப்புயலின் தாறுமாறான நடனத்தைப் பார்க்க போகிறீர்கள்” எனக் கூறியுள்ளனர்.