Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனக்கும் நாகேஷுக்கும் மட்டும்தான் அது தெரியும்.. இப்படிலாம் நடந்திருக்கா?

Advertiesment
நாகேஷ்

Bala

, புதன், 3 டிசம்பர் 2025 (15:29 IST)
தமிழ் சினிமாவில் ஒரு ஆகச் சிறந்த நடிகராக இருந்தவர் காமெடி புயல் நாகேஷ். இன்று எத்தனையோ பல நடிகர்கள் காமெடியில் கலக்கி வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தவர் நாகேஷ். கவுண்டமணியில் இருந்து இன்று யோகி பாபு வரை அனைவரின் காமெடியிலும் நாகேஷின் தாக்கத்தை நாம் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக காதலிக்க நேரமில்லை படத்தில் அவருடைய காமெடிக்கு ரசிகர்கள் ஏராளம்.
 
அவருடைய காமெடியை பார்ப்பதற்காகவே அந்த படத்தை பார்த்தவர்கள் நிறையபேர். அந்த படத்தில் அவரும் பாலையாவும் சேர்ந்து செய்த காமெடிக்கு இன்றைய தலைமுறை வரை ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில் நாகேஷை பற்றி பிரபல காமெடி நடிகர் மாது பாலாஜி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். கிரேசி மோகனும் மாது பாலாஜியும் பல நாடகங்களை அரங்கேற்றியவர்கள்.
 
வெளிநாடுகளில் எல்லாம் நாடகங்களை செய்து இருக்கின்றனர். அப்படி ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருந்த பொழுது நாகேஷ் திடீரென அவர்களுடைய நாடகத்தை பார்க்க வந்திருக்கிறார். அப்போது அவருக்கு வயது 74 இருக்கும் என மாது பாலாஜி கூறினார். ஒரு படத்தில் கவுண்டமணி காமெடி வரும். தனக்கு பார்த்த பெண்ணும் செவிடாக இருப்பார். பெண்ணின் குடும்பத்தார் அனைவருமே செவிடாக இருப்பார். சாஸ்திரியும் செவிடு.
 
செந்தில் அந்த பெண்ணை கவுண்டமணிக்கு திருமணம் செய்து வைப்பார். இது கிரேசி மோகன் ஒரு நாடகத்தில் எழுதிய கதையை தான் அந்தப் படத்தில் பயன்படுத்தினார்கள். அதே காமெடியை தான் அன்று நாடகத்தில் அரங்கேற்றிக் கொண்டிருந்தார்களாம். நாடகத்தில் மாதுபாலாஜி சாஸ்திரியை பார்த்து அடப்பாவி நீயுமா செவிடு? என கேட்பார். அந்த    நாடகத்தை பார்த்து முடித்தவுடன் மாது பாலாஜியையும் கிரேசி மோகனையும் நாகேஷ் அழைத்து அந்தப் பெண் செவிடு என தெரியும். அவர்களுடைய குடும்பமும் செவிடு என தெரியும்.
 
அந்த சாஸ்திரிக்கும் காது கேட்காது எனும் போது ‘ நீயுமா’ என்று கேள். கிளாப்ஸ் அள்ளூம் என கூறியுள்ளார். அவர் சொன்னதை போல அடுத்த நாடகத்தில் அப்படி செய்திருக்கின்றனர். கைத்தட்டல்கள் கிடைத்ததாக மாதுபாலாஜி  கூறினார். நாடகத்தை முடித்ததும் நாகேஷை மாது பாலாஜிதான் காரில் கொண்டு போய் விட்டாராம். அதுவரைக்கும் தன்னுடைய நடிப்பு எப்படி இருந்தது என நாகேஷ் சொல்லவே இல்லையாம். அது தனக்கு வருத்தமாக இருந்தது என மாதுபாலாஜி கூறினார். 
 
ஆனால் காரில் இறங்கியதும் ஒரு 5 ஸ்டெப் உள்ளே போன நாகேஷ் திரும்பி வந்து ‘பாலாஜி என்னோட ஆரம்பகாலத்துல எப்படி வேகமாக பேசுவேனோ அந்த மாதிரி பேசுற. அந்த கிளாரிட்டி உங்கிட்ட இருக்கு. வாழ்த்துக்கள்’ அப்படினு போனாராம். அது பெரிய ஆஸ்கார் விருது வாங்கிய ஃபீலிங்கை எனக்கு கொடுத்துச்சு. இது எனக்கும் நாகேஷுக்கும் மட்டும்தான் தெரியும். அது போதும் எனக்கு என மாதுபாலாஜி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகேந்திரன் பற்றி சொன்னதுல என்ன தப்பு? ராஜகுமாரனுக்காக வக்காளத்து வாங்கும் பயில்வான் ரங்கநாதன்