Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொன்னியின் செல்வன் படப் பாடல் காப்புரிமை விவகாரம்… ஏ ஆர் ரஹ்மானுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Advertiesment
பொன்னியின் செல்வன்

vinoth

, வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (17:00 IST)
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக கருதப்படுபவர்  ஏ ஆஎ ரஹ்மான். உலகளவில் புகழ்பெற்ற இவர் 32 ஆண்டுகளாக இசையமைப்பாளராக கொண்டாடப்பட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் ஆரம்பித்த இவரின் இசைப் பயணம் தற்போது ஹாலிவுட் சினிமா வரை விரிந்துள்ளது.

இந்நிலையில் ஏ ஆர் ரஹ்மான் இசையமத்தப் பாடல் ஒன்று தற்போது காப்புரிமை சிக்கலில் மாட்டியுள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன்னர் ரஹ்மான் இசையில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்’வீர ராஜா வீரா’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.

அந்த பாடல் ’சிவா ஸ்துதி ‘ பாடலை நகலெடுத்து உருவாக்கப்பட்டுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி ஏ ஆர் ரஹ்மான் நீதிமன்றத்தில் 2 கோடி ரூபாயை வைப்பு நிதியாகக் கட்டவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கிறாரா நானி?... அவரே பகிர்ந்த தகவல்!