Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனது சகோதரனை பார்க்க முடியவில்லை ...எஸ்பிபி குறித்து ஜேசுதாஸ் உருக்கம் !

Advertiesment
எனது சகோதரனை பார்க்க முடியவில்லை ...எஸ்பிபி குறித்து ஜேசுதாஸ் உருக்கம் !
, சனி, 26 செப்டம்பர் 2020 (16:23 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது.   

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அவர் கொரோனா சரியான பின்னரும் நேற்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததை எண்ணி அனைவரும் மிகுந்த வேதனை அடைந்துவிட்டனர்.  

இந்நிலையில் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பாடகர் மனோ, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் இந்தியத் திரை இசையில் மிக மூத்தவரும், எஸ்பிபியின் குருவுமான பாடகர் கே.ஜே, ஜேசுதாஸ், எஸ்பிபியின் மரணம் குறித்து விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், என்னோடு பணியாற்றியவர்களில் நண்பர் பாலு என் உடன் பிறந்தவர் போன்றவர்.  எனது சகோதரனை என்னால்  கடைசிநேரத்தில் பார்க்க முடியவில்லை என்று உருக்கத்துதன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரம்பா, நமீதா எல்லோரையும் ஒரே போட்டோவில் ஓவர் டேக் செய்த ஷிவானி!