கூலி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
வியாழன், 4 செப்டம்பர் 2025 (15:38 IST)
தமிழ் சினிமாவின் வசூல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சமீபத்தைய சென்சேஷன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கிய ‘கூலி’ படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவுக்கு ‘பில்டப்’ கொடுக்கப்பட்டு ரிலீஸான நிலையில் படம் வெளியான முதல் காட்சியில் இருந்தேக் கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. விமர்சனங்கள் வசூலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது. ஏனென்றால் படம் வெளியாகி 10 நாட்களில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by prime video IN (@primevideoin)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரம்மாண்ட அறிவியல் புனைகதை படம்… கைகோர்க்கும் ஏஜிஎஸ்- ப்ரதீப்பின் அடுத்த பட அப்டேட்!

இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆகிறதா பிரசாந்த் நீல் & ஜூனியர் என் டி ஆர் படம்?

மீண்டும் வருகிறது ‘புதிய பாதை’… ரீமேக் செய்து நடிக்கும் பார்த்திபன்!

என்னை வெளிய போக சொல்ல நீங்க யாரு! திவ்யாவிடம் எகிறிய வாட்டர்மெலன்! Biggboss-ல் ட்விஸ்ட்!

ரித்திகா சிங்கின் வைரல் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments