விடுமுறை முடிந்து தொடங்கிய வேலை நாளில் பல மடங்கு சரிந்த ‘கூலி’ படத்தின் வசூல்!

vinoth
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (09:03 IST)
தமிழ் சினிமாவின் வசூல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சமீபத்தைய சென்சேஷன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கிய ‘கூலி’ படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவுக்கு ‘பில்டப்’ கொடுக்கப்பட்டு ரிலீஸான நிலையில் படம் வெளியான முதல் காட்சியில் இருந்தேக் கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. புதிதாக எதுவும் இல்லாமல் மசாலா படங்களுக்கே உரிய அதே டெம்ப்ளேட் திரைக்கதை, கதாநாயக வழிபாடு என அரைத்த மாவையே லோகேஷ் அரைத்துள்ளார் என ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில்தான் நான்கு நாட்களில் இந்த படம் உலகளவில் 404 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் விடுமுறை நாட்கள் முடிந்து நேற்று ஐந்தாவது நாளான திங்கள் கிழமையில் இந்த படத்தின் வசூல் பல மடங்கு சரிந்துள்ளது. நேற்று இந்திய அளவில் இந்த படம் சுமார் 13 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் அரசியல் தலையீடா? உறுப்பினர்கள் மத்தியில் கலக்கம்!

துக்க நிகழ்வுல கலந்துக்கக் கூட தகுதியில்லாத ஆளு! வடிவேலுவை இப்படி பேசுனவரு யாருப்பா?

Lik படத்தின் டிஜிட்டல் வியாபாரத்தில் மீண்டும் ஒரு சிக்கலா?... ரிலீஸ் தேதி மாறுமா?

கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியையே மீண்டும் ஷூட் செய்கிறதா படக்குழு?

மூன்று நாட்களில் ‘காந்தா’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments