Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’கூலி’ படத்திற்கு 2 வாரங்கள் தான் டைம்.. அதன் பின் வெளியாகும் 5 படங்கள்.. வசூலை எடுக்க முடியுமா?

Advertiesment
கூலி

Siva

, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (17:57 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. கேரளாவில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, ஆகஸ்ட் 26ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படவிருப்பதால், அதற்குள் அதிகபட்ச வசூலை ஈட்டுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் ஆகஸ்ட் 26ஆம் தேதி மோகன்லால், பகத் பாசில் மற்றும் துலர் சல்மான் நடித்த படங்கள் உட்பட ஐந்து புதிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இந்த ஐந்து படங்களும் கேரளாவில் 'கூலி' படத்தின் வசூலுக்கு பெரும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
எனவே, 'கூலி' படமானது வெளியானது முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அதிகபட்ச வசூலை ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் படக்குழுவினர் கேரளாவில் பிரம்மாண்டமான விளம்பரப் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே, 'கூலி' படத்திற்கான முன்பதிவு கேரளாவில் பெரும் வரவேற்பை பெற்று, கணிசமான வசூலை ஈட்டியுள்ளது. இந்த நிலையில், இரண்டு வாரங்களுக்குள் மொத்த பணத்தையும் வசூல் செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் படக்குழுவினர் வியூகம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டம், கேரளாவில் திரைப்பட வியாபார வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தப் படம், கேரளாவில் எந்த அளவுக்கு வசூல் சாதனை படைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"கூலி" படத்தில் கலாநிதி மாறன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா? வதந்தியா? உண்மையா?