Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’டிடி நெக்ஸ்ட் லெவல்’ வாஷ் அவுட்.. சூரியின் மாமன் சூப்பர்ஹிட்.. சோகத்தில் சந்தானம்..!

Siva
திங்கள், 2 ஜூன் 2025 (16:35 IST)
சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் மற்றும் சூரி நடித்த மாமன் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகியது. இருவருமே பிரபல காமெடி நடிகர்களாக இருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்தவர்கள் என்பதும், இந்த இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற போட்டி திரையுலகினர்களை கூர்ந்து கவனிக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், சூரியின் மாமன் திரைப்படம் 40 கோடி வசூல் செய்த நிலையில், சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வாஷி அவுட் ஆகிவிட்டதாகவும், போட்ட காசு கூட வரவில்லை என்றும் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சூரி அடுத்தடுத்து ஹீரோவாக படங்களை புக் செய்து கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் காமெடி வேடத்திற்கு திரும்பி விடலாமா என்று சந்தானத்தை இந்த படத்தின் தோல்வி யோசிக்க வைத்துள்ளதாகவும் தெரிகிறது.
 
சூரி காமெடி நடிகராக பல வருடங்கள் இருந்தாலும், ஹீரோவான பிறகு அவர் முழுக்க முழுக்க சீரியஸ் ஆன கேரக்டரையை ஏற்று நடித்தார். விடுதலை படத்தின் இரண்டு பாகங்கள் உள்பட அனைத்து படங்களிலும் அவர் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், முழுக்க முழுக்க தன்னுடைய பாணியை மாற்றினார்.
 
ஆனால் சந்தானம் ஹீரோ ஆன பின்னரும் காமெடியை தொடர்ந்து கொண்டிருந்ததால் தான் அவரது படம் வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பட்ஜெட் வெறும் ரூ.70 லட்சம்.. வசூலோ ரூ.70 கோடி.. திரைப்படம்ன்னா இப்படி இருக்கனும்..!

ரத்தக் காட்டேரியாக மாறும் ராஷ்மிகா!? கவனம் ஈர்க்கும் Thama Teaser!

நீல நிற சேலையில் எக்ஸ்ட்ரா அழகோடு ஜொலிக்கும் திவ்யபாரதி!

கவர்ச்சித் தூக்கலான கலர்ஃபுல் உடையில் மிளுறும் திஷா பதானி!

மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘மாமன்னன்’ படங்களை மிஸ் செய்துவிட்டேன் – அனுபமா வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments