Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் எஸ்.ஜே.சூர்யா.. ’தல’ சம்மதம் கிடைக்குமா?

Siva
திங்கள், 2 ஜூன் 2025 (16:21 IST)
அஜித் நடித்த 'வாலி' திரைப்படம் தான் எஸ்.ஜே. சூர்யாவுக்கு முதல் படம் மட்டுமின்றி, திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த படத்திற்கு பிறகு அஜித்தும் எஸ்.ஜே. சூர்யாவும் வேறு எந்த படத்திலும் இணையவில்லை.
 
இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். இந்த நிலையில், "ஆதிக் இடம், எனக்கு ஒரு கேரக்டர் அந்த படத்தில் கொடுங்கள்" என்று எஸ்.ஜே. சூர்யா  கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
எஸ்.ஜே. சூர்யா, கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்துக் கொண்டு பிஸியாக இருந்தாலும், அஜித்துடன்  ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையை கேட்டு உள்ளார். ஏற்கனவே  விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்த 'மார்க் ஆண்டனி' என்ற திரைப்படத்தை ஆதித் இயக்கியதால், ஆதிக்கும் எஸ்.ஜெ. சூர்யாவிற்கும் நல்ல நட்பு உள்ளது.
 
அந்த நட்பை பயன்படுத்தி, அஜித்தின் அடுத்த படத்தில் அவருக்கு ஒரு வாய்ப்பை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படியே வாய்ப்பு கொடுத்தாலும், அதற்கு அஜித் ஒப்புக்கொள்வாரா என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments