Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊரே குளோன்னு கெடக்கும் போது உங்களுக்கு குளு குளுன்னு பிக்னிக் கேட்குதா...?

Advertiesment
Comedy actor sathish
, திங்கள், 23 மார்ச் 2020 (17:06 IST)
விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட இளம் நடிகர்களுடன் நகைச்சுவை கூட்டணி அமைத்து நடித்து வரும் நடிகர் சதீஷ், முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஹீரோக்களின் நெருங்கிய நண்பனாக காமெடி செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சதிஷ் தொடர்ந்து புது புது படங்களில் கமிட்டாகி வருகிறார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒட்டுமொத்த மக்களாலும் வீடுகளில் தஞ்சம் அடைந்திருக்கும் வேளையில் பிரபலங்கள் பலரும் 24 மணி நேரமும் சமூகவலைத்தளங்களில் நேரத்தை செலவழித்து ரசிகர்களுடன் லைவ் சாட் உள்ளிட்டவற்றில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர்.

அதில் காமெடி நடிகர் சதீஷ் சற்று மாறுபட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் ஹாயாக நிற்பது போன்ற புகைப்படமொன்றை வெளியிட்டு " இந்த நேரத்துல இந்த போட்டோ அவசியம்தானா?" என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை கண்ட நெட்டிசன்ஸ் " இதை நாங்க கேட்குறதுதுக்கு முன்னாடி நீங்களே கேட்டுக்கிட்டிங்களே பாஸ் பிரம்மாதம் என கிண்டலாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் கியூட் ஏஞ்சலுக்கு.... ஆல்யா வெளியிட்ட அழகிய வீடியோ!