Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்? தளபதி 65 படத்தின் முதல் அப்டேட்!

Advertiesment
மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்? தளபதி 65 படத்தின் முதல் அப்டேட்!
, திங்கள், 23 மார்ச் 2020 (14:10 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். மேலும் கமல் ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதையடுத்து மக்களை போன்றே பிரபலங்களும் 24 மணி நேரமும் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவழித்து வருகின்றனர. அந்தவகையில் தற்போது ரசிகர்களுடன் நேரலையில் உரையாடிய காஜல் அகர்வால் ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அப்போது அவரது ரசிகை ஒருவர் தளபதி விஜய் குறித்து கேள்வி எழுப்பியபோது விஜய் என்னுடைய ஃபேவரைட் கோ-ஸ்டார். அவரோடு விரைவில் படம் பண்ணுவேன் என்று படபடப்பாக பேசியுள்ளார். விஜய் அடுத்து நடிக்கப்போவதோ தளபதி 65 படம். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் காஜல் விஜய்க்கு ஜோடியாக நடித்தால் இன்னும் அற்புதமாக இருக்கும் என நம்பலாம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சகாப்தம் சாய்ந்தது: இயக்குனர் விசு கடந்துவந்த பாதை - வீடியோ தொகுப்பு!