Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றின் மொழி: முதல் நாள் முதல் காட்சிக்கு தயாராகியுள்ள கல்லூரி மாணவிகள்

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (09:07 IST)
ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கிய 'காற்றின் மொழி' திரைப்படம் வரும் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் கடந்த சிலநாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒரு கல்லூரியின் 160 மாணவிகள் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க முடிவு செய்துள்ளனர் என்பதும் இதற்கு இந்த கல்லூரியின் நிர்வாகமே ஏற்பாடு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நெய்வேலியில் உள்ள நேஷனல் கல்லூரியை சேர்ந்த பி.எட் மாணவிகள் 160 பேர் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி கண்டுகளிக்க உள்ளனர்

இதுகுறித்து இந்த கல்லூரியின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: . நடிகை ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலுமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது உள்ள ஸ்மார்ட்போன் யுகத்தில் யார் எதை பார்க்க வேண்டும் என்று தணிக்கை செய்ய முடியவில்லை. நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் வேகமாக பரவிவிடுகிறது. இந்த சூழலில்  ஜோதிகா போன்ற நல்லெண்ணம் கொண்ட சிறந்தவர்கள்  தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் தான் எங்களுக்கு மிகப்பெரிய நல்ல தன்னம்பிக்கையாக உள்ளது .  36 வயதினிலே, மகளிர்மட்டும் போன்ற படங்கள் பெண்களுக்கு வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் , எப்படி வாழ வேண்டும் என்பதை பொழுதுபோக்கோடு சொல்லியது.
 

மகளிர்மட்டும் திரைப்படத்தை கடந்த வருடம் நாங்கள் உட்பட  எங்களது கல்லூரியிலுள்ள  அனைத்து  மாணவிகளும்  கண்டுகளித்தோம் .  அவர்கள் படம் பார்த்துவிட்டு,மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகா புல்லட்  ஓட்டி வந்தது போல் கல்லூரியில் நாங்கள் புல்லட் மற்றும் கன்று குட்டி ஒன்றை ஏற்பாடு செய்து வைத்ததில் அனைவரும் புகைப்படம் எடுத்து கொண்டோம் . மகளிர் மட்டும் எங்களது மாணவிகளுக்கு புத்துணர்ச்சி தந்தது. அதே போல் “ காற்றின் மொழியும் “ இருக்கும் என்று நம்புகிறோம். காரணம் இயக்குனர் ராதா மோகனின் “ மொழி “ எங்களுக்கு பிடித்த படம். என்றும் எல்லோரும் ரசிக்கும் ஆபாசமில்லாத படம். அதே போல் காற்றின் மொழியும் இருக்கும் என்று நம்புகிறோம். இங்கே நாவல் படித்து கருத்தை தெரிந்துகொள்ள யாருக்கும் நேரமில்லை. ஆனால்,சினிமாவை பெரிதும் திரையரங்கில் சென்று கண்டிராத எமது மாணவிகளுக்கு காற்றின் மொழி அதை அனைத்தையும்,  கண்டிப்பாக தரும் என்று நம்புகிறோம், என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments