"நீங்க சொல்லுற ஹலோ வேற லெவல்!" - ஜோதிகாவை புகழ்ந்த சிம்பு..!

வியாழன், 8 நவம்பர் 2018 (18:53 IST)
செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு ஜோதிகா காற்றின் மொழி படத்துல் நடித்துள்ளார். ராதா மோகன் இயக்கத்தில் பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.  
வித்யாபாலன் நடிப்பில் இந்தியில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படம் `துமாரி சுலு.’ இப்படத்தின் ரீமேக்காக தமிழில் ஜோதிகா லீட் ரோலில்  நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விதார்த், ஜோதிகாவின் கணவராக நடித்திருக்கிறார்.
 
குடும்ப பெண்ணான ஜோதிகா ரேடியோ நிறுவனத்தில் ஆர்.ஜே ஆகும் வகையில் இந்தப் படத்தின் கதையம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஹெச்.காஷிப் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். 
 
கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் டீசர் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் இப்படத்தின் புகைப்படங்கள், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தது. 
 
இந்நிலையில் இன்று `காற்றின் மொழி' படத்தின் டிரெய்லர் நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.
 
குறும்புத்தனமான குடும்ப பெண் ஜோதிகாவுக்கு, ஆர்.ஜே வேலையால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த படத்திற்கு சிறப்பை அளிக்கும் விதமாக நடிகர்  சிம்பு கெஸ்ட் ரோலில்  பிரமாதமான நடித்து அசத்தியுள்ளார். வரும் 16-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பார்த்திடலாம் வா நீயா நானா..? - தனுஷுடன் போட்டியிட்ட சாய்பல்லவி