வெய்ட்டிங்கே வெறி ஏத்துதே... விக்ரமின் "கோப்ரா" பட நியூ லுக் போஸ்டர்!

வியாழன், 27 பிப்ரவரி 2020 (18:29 IST)
விக்ரம் நடித்துவரும் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்து விட்டு அடுத்ததாக விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்
 
அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடி ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 28ஆம் தேதி நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் சற்றுமுன் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நாளை வெளியகவுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டரை கொண்டாட விக்ரம் ரசிகர்களை தயார்படுத்தும் விதத்தில் வெறித்தனமான... செம ஸ்டைலான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரே பர்ஸ்ட் தரத்தில் உள்ளதால் நிச்சயம் நாளை பெரிய சம்பவம் இருக்கு என எதிர்பார்க்கப்படுகிறது. 

Make Way for Chiyaan!! First Look of #Cobra tomorrow ❤️❤️!! @Lalit_SevenScr @7screenstudio @arrahman @IrfanPathan @SrinidhiShetty7 @Harishdop @theedittable @proyuvraaj @sooriaruna pic.twitter.com/qd2XsPtBJz

— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) February 27, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ரம்யா நம்பீசனுடன் டூயட் பாடும் ரியோ "என்னோடுவா" ரொமான்டிக் வீடியோ பாடல்!