Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரம்யா நம்பீசனுடன் டூயட் பாடும் ரியோ "என்னோடுவா" ரொமான்டிக் வீடியோ பாடல்!

ரம்யா நம்பீசனுடன் டூயட் பாடும் ரியோ
, வியாழன், 27 பிப்ரவரி 2020 (18:16 IST)
பானா காத்தாடி மற்றும் செம போதை ஆகாதே போன்ற படங்ககளை இயக்கிய இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தற்போது நடிகர் ரியோவை வைத்து "பிளான் பண்ணி பண்ணனும்" என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
 
சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளைஞர்களிடம் ஃபேமஸானவர் ரியோ ராஜ். அதில் கிடைத்த புகழை வைத்து சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையேயும் படு பாப்புலர் ஆனார் ரியோ. அதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியானநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். ஓரளவிற்கு ஓடி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்ற அப்படத்தை தொடர்ந்து தற்போது இன்னொரு இன்னிங்ஸை துவங்கியுள்ளார் ரியோ.
 
பாசிட்டிவ் பிரிண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரோபோ ஷங்கர், சந்தான பாரதி, ஆடுகளம் நரேன், முனீஷ்காந்த், பாஸ்கர் என்று இன்னும் ஏராளமானோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் மூலம் மூன்றாவது முறையாக பத்ரி வெங்கடேஷ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறும்  " என்னோடுவா " என்ற வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதோ அந்த பாடல் ...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜுவாலா கட்டாவுடன் மறுமணம்? விஷ்ணு விஷால் ஷாக்கிங் பதில்